ஹோட்டல் நீச்சல் குளத்தில் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்....!
பெந்தோட்டை சுற்றுலா ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்து இரண்டு வயதும் மூன்று மாதமும் ஆன குழந்தை உயிரிழந்துள்ளது.
ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் நேற்று (10.11.2023) மாலை குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயூப் அமானுல்லா என்ற குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மைதான நீச்சல் குளம்
கொழும்பு - திம்பிரிகஸ்யா பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெந்தோட்டை பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்கள்.
குழந்தை அறையில் இல்லாததால் தாயும் தந்தையும் தேடியபோது ஹோட்டல் மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று (10) மாலை குழந்தை பெற்றோருக்கு தெரியாமல் நீச்சல் குளத்தில் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையில் சடலம் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |