வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா?
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தில் 2018 ம் ஆண்டு தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மாத்திரம் 31 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான- குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட பொது பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வழங்கிய தகவல்களின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதே நேரம் 2017 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் தலா ஒன்றாக காணப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு 4 ஆகவும் 2019 ஆம் ஆண்டு 5 ஆகவும் 2020 ஆண்டு 4 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 11.
அதே நேரம் 2022 ஆண்டு 4 சம்பவங்களும் 2023 முதல் ஆறுமாத காலப்பகுதியில் 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதாவது 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மன்னாரில் பதிவாகி வருகின்றன.
2015 ஆண்டு தொடக்கம் தற்போது வரையான 8வருட காலப்பகுதியில் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான 113 பாலியல் துஸ்பிரோயாகம் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த 113 முறைப்பாடுகள் தொடர்பிலும் 113 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது. குறிப்பாக 2015 ஆண்டு 16 துஸ்பிரயோக சம்பவங்களும் 2016 ஆண்டு 17 சம்பவங்களும் 2017 ஆண்டு 17 சம்பவங்களும் 2018 ஆண்டு 16 சம்பவங்களும் 2019 ஆண்டு 8 சம்பவங்களும் 2020 ஆண்டு 11 சம்பவங்களும் 2021 ஆண்டு 7 சம்பவங்களும் 2022 ஆண்டு 15 சம்பவங்களும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதி வரையான 6 மாத காலப்பகுதியில் 6 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் பானை ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, யுத்தம் காரணமான உளவளப் பிரச்சனையும் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள் பொதுமக்கள்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
