மரண வீட்டிற்குச் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு(Batticaloa) வெல்லாவெளி - தும்பங்கேணி பிரதேசத்தில் குளிக்கும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நீர்நிலையில் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவரை உறவினர்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்டெடுத்து பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அந்த பகுதியிலுள்ள வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
