மலையகத்தில் தாயை தொடர்ந்து குழந்தையும் சடலமாக மீட்பு
லிந்துலை - லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட பெண் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது ஒன்றரை வயது குழந்தையும் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மகாமணி தயானி என்பவரே இவ்வாறு குளத்தில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
மேலும், திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் ஐந்து பக்கங்களைக் கொண்ட கடிதம் ஆகியனவும் குளத்துக்கு அருகிலிருந்து மீட்டுள்ளன என லிந்துலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கணவர் மற்றும் உறவினர்களின் துன்புறுத்தல்
தன்னையும் தனது குழந்தையையும், கணவரும், அவரின் உறவினர்களும் துன்புறுத்தினர் என அந்தக் கடிதத்தில் குறித்த பெண் எழுதியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
