மோசமான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 80 சிறுவர்கள்
ஊவா மாகாணத்தில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் 80 சிறுவர்கள் மோசமான நடத்தைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண நன்னடத்தை ஆணையாளர் தீக்சன எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தின் வெல்லவாய மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்தே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக பதிவாகிய போதிலும் பொதுவாக அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இவை அறிக்கையிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்படும் சிறுவர்கள்
ஊவா மாகாணத்தில் 604 பிள்ளைகள் சிறுவர் இல்லங்கள், சிறுவர் அபிவிருத்தி இல்லங்கள் சான்றளிக்கப்பட்ட பாடசாலைகள் சிறுமிகள் பயிற்சி ஆலோசனை மையங்கள், சிறுமிகள் தங்குமிட மையங்கள் மற்றும் தங்குமிட இல்லங்கள் ஆகிய 18 நிறுவனங்களில் தங்கி வாழ்ந்து வருவதாக ஊவா மாகாண நன்னடத்தை ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 186 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் தொடர்பான 80 வழக்குகளும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான 60 வழக்குகளும் இந்த வழக்குகளுக்குள் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 16 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam