மனரீதியாக பாதிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் : ஆபத்தான ஆய்வறிக்கை
இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களிடையே மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்றன உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் இதுவரை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மனஅழுத்தம் (Depression) உயர் மட்டத்தில் காணப்படுவதாக சிறுவர் மற்றும் பதின்ம வயது மனநலம் பற்றிய விசேட வைத்தியர்களால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு ஆய்வு
சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு ஆய்வு மற்றும் ஆராய்ச்சித் தரவுகளின்படி மருத்துவம் பொறியியல் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பெருமளவிலான மாணவர்கள் இவ்வாறு கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆராயப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தங்குமிட வசதிகள் மற்றும் கல்வி உபகரணங்களுக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்தல் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, பட்டப்படிப்பின் பின்னர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஸ்திரத்தன்மை பற்றிய பயம்,
ஒரு பல்கலைக்கழக மாணவராகத் தங்கள் குடும்பத்தினர் தங்கள் மீது வைத்துள்ள அதிகப்படியான எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மனநிலை ஆகியன இந்நிலைக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
உயர் கல்வியில் காணப்படும் குறைபாடு
உயர் கல்வி முறைக்குள் நிலவும் கடுமையான போட்டித்தன்மை மாணவர்களின் மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அதிகப்படியான பாடத்திட்டம் தொடர்ச்சியான மதிப்பீடுகள் மற்றும் புள்ளி மதிப்பு குறித்த முக்கியத்துவம் காரணமாக திறமையான மாணவர்கள் கூட மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக சில பல்கலைக்கழகங்களில் காணப்படும் மாணவர்களிடையிலான பகிடிவதை விசேடமாக முதலாம் வருட மாணவர்கள் கடுமையான அதிர்ச்சிக்கும் சமூகத்திலிருந்து தனிமைப்படுவதற்கும் மற்றும் தீவிர மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் மருத்துவ மையங்கள் மற்றும் மாணவர் ஆலோசனை சேவைகள் நிறுவப்பட்டிருந்த போதிலும் மாணவர்கள் அவற்றை மிகக் குறைந்தளவிலேயே பயன்படுத்துகின்றனர் என்பதும் இந்த ஆய்வில் வெளிவந்துள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 17 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam