வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இளங்கோவன் பொறுப்பேற்பு
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வானது இன்று(15.03.2024) காலை யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளராக பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்
பின்னர் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர், செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan