பெரும் போராட்டத்திற்கு தயாராகும் சஜித் அணி! - பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போராட்டக்காரர்களை கொழும்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளைய தினம் கொழும்பில் போராட்டமொன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையிலானவர்கள் பங்குபற்ற திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதனால் அவர்களை கொழும்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை திருப்பி அனுப்புமாறு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் கோவிட் பெருந்தொற்று அலையொன்று மீளவும் ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களை கொழும்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
