தமிழ்நாடு சட்டமன்றத்தை அதிரவைத்த முதலமைச்சர் விஜயின் முதல் உரை
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரண்டாவது நாள் அமர்வில் சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஜேசிடி பிரபாகரனின் இரு கைகளையும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
முதலமைச்சர் விஜயின் முதல் உரை
இதன்போது சபாநாயகரை வாழ்த்தி தனது முதல் உரையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றியுள்ளார்.

சட்டசபையில் உள்ள அனைவரும் சமம். ஜனநாயகத்தின் முறைபடி பேரவை செயல்படும். பேரவைத் தலைவரை அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கையை பிடித்து அழைத்து வருவதன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.
இங்கிலாந்தில் சட்டசபையும் மன்னராட்சியும் நடைபெற்றது. அப்போது மன்னர் எடுக்கும் முடிவை சட்டசபை நிராகரித்துவிடும். இவ்வாறு நிராகரிக்கும் முடிவை மன்னரிடம் போய் யார் சொல்வது என்ற கேள்வி எழுந்தது.
இதனால்தான் சட்டசபையில் எடுக்கும் முடிவுகளை, மன்னரிடம் சொல்வதற்காகவே சபாநாயகரை நியமித்தார்கள். அவர் போய் மன்னரிடம் சொன்ன போது கோபமடையும் மன்னர், சபாநாயகருக்கு தூக்கு தண்டனை கொடுப்பார்.
இதனால் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவோர் உயிருக்கு அஞ்சி தலை தப்பினால் போதும் என நினைத்து சபாநாயகர் பொறுப்பே வேண்டாம் என கூறி ஓடுவார். அவ்வாறு தப்பி ஓடும் அவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையை பிடித்து இழுத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர் என தெரிவித்தமைக்கு சபையினர் மேசையை தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு
இதனையடுத்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது.
அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இடம் பெற்றிருப்பவர்களின் கருத்துகளுக்கும், தவெக உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாக மதிப்பளிக்கப்பட்டு, நன்மைகள் ஏற்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்தப் பேரவை செயல்படும். அதற்குறிய வகையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையை வழிநடத்தும் பன்பை பெற்ற தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டப்பேரவை ஜனநாயக பண்புகள், ஜனநாயக நெறிகள் பேணிப் பாதுகாப்பதில் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.