தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்: சபாநாயகருக்கு சென்றுள்ள கடிதம்
கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவின மூலங்களும் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..
ஜனாதிபதிக்கான நிதியை குறைத்து அவரை பதவி விலக்க வேண்டும் - குமார வெல்கம கோரிக்கை
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri