பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்குமாக இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில், சிக்குன்குனியா நோய்ப்பரவல் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் சிக்குன்குனியாவாக இருக்கலாம் என சந்தேகத்திற்கிடமான 190 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவற்றில் 65 பேருக்கு நோயுறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக மருத்து நிபுணர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.
நோய் அறிகுறி
2 - 3 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய மூட்டு வலி மற்றும் அன்றாட செயற்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும். நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்துவது டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்ப்பரவலை குறைக்க உதவும் என்று அவர் விளக்கினார்.
சிக்குன்குனியா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அது சார்ந்த ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 19 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
