கோழி இறைச்சி விலை 850 ரூபா வரை குறையும்: வர்த்தக அமைச்சு தகவல்
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை உள்ளூர் சந்தையில் 850 ரூபா முதல் 900 ரூபாவரை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படுமென்று வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி விலையை 850 ரூபாவுக்கு குறைக்க வேண்டுமென்று கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், இவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைவதை தடுக்க இன்னும் தாம் அவகாசம் அளித்து வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை இறக்குமதி
எவ்வாறாயினும், கோழி இறைச்சி விலையை 100 ரூபாவால் குறைக்க உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததுடன், இன்று முதல் 100 ரூபாவும் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 100 ரூபாவும் குறைக்கப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் இறுதிவரை முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போதைய முட்டை விலையை நிலைநிறுத்த ஒப்புக்கொண்டால், முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan