விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் குறைக்கப்படும் அல்லது வர்த்தமானியில் வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22.06.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், சீமெந்து, மாபிள், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் வெதுப்பக உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களுக்கு அடுத்த சில வாரங்களில் வர்த்தமானி மூலம் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் அல்லது உள்ளூர் கைத்தொழில் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை
தேசிய உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறவேண்டிய நன்மைகள் இன்னும், பொதுமக்களை சென்றடையவில்லை.
மின்கட்டணம் மற்றும் வங்கி வட்டி வீத அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும், நாம் தற்போது கொண்டுவந்துள்ள பொருளாதார முன்னேற்றமானது, ஒருவழியிலேனும் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சில பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |