கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை எப்போது குறைக்கப்படும்! வெளியான அறிவிப்பு
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை வகைகளின் விலைகளை குறைப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி செய்யும் உத்தேசம் கிடையாது
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக முட்டை இறக்குமதி செய்யும் உத்தேசம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்திகள் அண்மைய ஆண்டுகளில் சீரான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்திகளின் அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய கோழி மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |