வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று
வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில வெளியாகின.
அதில் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பூலோகம் இந்திரன் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த இருவரையும் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
