தமிழகத்தில் ஈழத்தமிழரின் நிலைப்பாடு என்ன?
தேர்தல் பரப்புரை கூட்டங்களில் ஈழத்தமிழர் குறித்து ஓரளவில் பேசப்பட்டதே தவிர, அழுத்தமாக எந்த இடத்திலும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தேர்தலின்போது பல்வேறுபட்ட கட்சிகளினுடைய தேர்தல் அறிக்கைகளினூடாக ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது வெளிப்பட்டது.
குறிப்பாக முக்கிய கட்சிகளாக இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் ஈழ தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தருவதில் பங்களிப்பை செய்வனவாக இருந்தன.
ஆனால் பரப்புரை கூட்டங்களில் அதுகுறித்து ஓரளவில் பேசப்பட்டதைத் தவிர அழுத்தமாக எந்த இடத்திலும் பேசப்பட்டதாக நான் அறியவில்லை.
எனினும் ஈழத்தமிழர்கள் குறித்து அதிகம் பேசுகிற கட்சிகள் கூட இந்த தேர்தல் பரப்புரைகளில் அப்படிப்பட்ட செய்திகள் எதுவும் பேசவில்லை என்பது தான் இந்த தேர்தலில் நாம் சந்தித்த ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri