சென்னை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! இலங்கை பெண்கள் விமான நிலையத்தில் கைது
இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

பிண்ணனியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணை
இதன்போது கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 2 பெண்களும் தங்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.25 இலட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam