செம்மணி மனித புதைகுழி! 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்வு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(5) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுப்பணிகள்
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam