செம்மணியில் இன்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்..
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணியில், 47 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள்
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 27 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 12 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் 47 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 36 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 122 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam