செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 412 மனித எலும்பு எச்சங்கள் மீட்பு
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(22.06.2026) 31ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றுள் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரில் புதைக்கப்பட்டவாறு
இன்றையதினம் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவற்றில் 03 என்புகள் ஒரே நேரில் புதைக்கப்பட்டவாறு காணப்பட்டுள்ளது.
மேலும் 09 என்புத் தொகுதிகள் நேர் சீரின்றி புதைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri