இலங்கையின் பாரிய கலாசார ஆபத்து! இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இரசாயனப் பாலுறவு கலாசாரம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர், குறித்த ஆபத்தான பாலுறவு நடைமுறையில் இருந்த போதிலும், தற்போது அது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, எச்ஐவி தொற்றாளர் அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தற்போது இரசாயன பாலுறவு என்ற புது அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் உள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் மதுபானம் மற்றும் சில போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொழும்பிற்குள்ளேயே பல இளைஞர் குழுக்கள் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
போதைக்காக, மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போன்ற மருந்துகளை பயன்படுத்தும் குழுக்கள் அதன் ஆபத்துகளை அறியாமல் பாலுறவில் ஈடுபடுகின்றனர்.
மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), மெபெட்ரோன் மற்றும் கெட்டமைன் போன்ற நான்கு பொருட்கள் பொதுவாக தொடர்புடையவையாகும்.
எனினும் போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே ஐஸ் போதைப்பொருள் அதிகமாக கிடைப்பதால், பாலியல் நடத்தையில் ஈடுபடும் இளைஞர்களிடையே அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் மருத்துவ தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனவே கொழும்பில் இரசாயன பாலுறவு அதிகரித்துள்ளது' என்று மருத்துவ கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இதேவேளை இளைஞர்களிடையே கொனோரியா மற்றும் சிபிலிஸ் போன்ற பாலியல் ரீதியாக
பரவும் நோய்த்தொற்றுகளும் அதிகரித்து வருவதாக மருத்துவ தரப்புக்கள்
தெரிவித்துள்ளன.