பிரபல சமையல் கலைஞர் Chef தாமு காலமானார்..
இந்திய புகழ்பெற்ற பிரபல சமையல் கலைஞர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற கே. தாமோதரன் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (25) காலை காலமானார்.
செஃப் தாமு என்று பரவலாக அறியப்பம் இவர், சமையல் கலையில் தனித்துவமான திறமை படைத்தவர்.
முனைவர் பட்டம்
இந்தியாவின் பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய அவர், பல்வேறு நாடுகளின் உணவு வகைகளைத் தயாரிப்பதில் நிபுணராகப் புகழ்பெற்றார்.

2010ஆம் ஆண்டில், 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகளில் தொடர்ந்து 617 வகையான உணவுகளைச் சமைத்து, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.
உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத் துறையில், சென்னை பல்கலைக்கழகத்தால் 2004ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் இவரே ஆவார்.
சமையல் கலைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, இந்திய மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. சமையல் கலை மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் அவர் பெரும் புகழ்பெற்றார்.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri