புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!
புலம்பெயர் இளைஞன் ஒருவன் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாண இளம் பெண்னை திருமணம் செய்து அந்தப் பெண்ணின் நகைகளையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் வசித்து வருகின்றார்.
திருமணம் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆதித்யா மண்டபத்தில் நடைபெற்றது.
சீதனம் என்று கூறி பல இலட்சங்கள்.. மாப்பிள்ளை குடும்பத்தாரின் போக்குவரத்துச் செலவுகள் என்று பல இலட்சங்கள் - இப்படி பெருந்தொகைப் பணம் அவருக்கு பெண்தரப்பால் வழங்கப்பட்டதாகப் பெண் தரப்பு கூறுகின்றது..
திருமண சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணுடன் சில வாரங்கள் தங்கியிருந்த அந்த இளைஞன் ஏப்ரல் மாதம் 12ம் திகதி மறுபடியும் ஜேர்மனி சென்றுவிட்டார்.
'ஒரு மாதத்தல் உன்னை ஜேர்மனிக்கு எடுத்துவிடுவேன்' என்று கூறி அவர் ஜேர்மனி புறப்படும் போது பெண்ணிடம் இருந்து 20 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார் சென்றுள்ளார் என்று அந்தப் பெண் குற்றம்சுமத்துகின்றார்.
ஜேர்மனி சென்று ஒரு வாரத்தில் தனது புது மனைவியைத் தொடர்புகொண்ட ' அந்த இளைஞன், தனக்கு ஜேர்மனியில் ஒரு காதலி இருப்பதாகவும், உன்னுடன் வாழ முடியாது என்று கூறியிருக்கின்றார்.
அந்த பெண் நீதி கேட்டுப் போராட முற்பட்டபோது, தான் ஒரு விடுதலப்புலி உறுப்பினர் என்றும், வாள்வெட்டுக்குழுவை அனுப்பி குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
எமது ஊடகத்தைத் தொடர்புகொண்ட அந்தப் பெண், திருமண நடந்தது உட்பட தான் மிரட்டப்பட்டது வரை அனைத்து ஆதாரங்களையும் எங்களிடம் ஒப்புவித்தார்.
இந்தியத் தூதரகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றனவற்றில் தான் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், ஜேர்மன் தூதராலயத்திலும் அந்த நபர் பற்றிய முறைப்பாடுகளைத் தான் வழங்க உள்ளதாகவும் அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார்.
அதேவேளை, ஜேர்மனியில் வசிக்கும் குறிப்பிட்ட இஞைன் எங்களைத் தொடர்புகொண்டு, தாம் பிரிந்ததற்கான வேறு சில காரணங்களைக் கூறினார்.
அந்தக் காரணங்களை பகிரங்கமாக ஊடகத்தில் வெளியிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு மணப்பெண்ணிடம் இருந்து தான் எந்தவிதமான நகைகளையோ அல்லது பணத்தையோ பெற்றுச்செல்லவில்லை என்றும் கூறினார்.
அததோடு தான் விடுதலைப் புலி உறுப்பினர் என்று எந்தச் சந்தரப்பத்திலும் கூறவில்லை என்றும், பெண்ணுக்கு மிரட்டல்கள் எதனையும் விடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திருமணச் செலவு மற்றும் பெண் வீட்டாருக்கான கடவுச் சீட்டுச் செலவு, தாலிக்கொடியின் செலவு போன்றன தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டதாவும் கருத்து வெளியிட்டார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
