கோட்டாபயவால் நான் ஏமாற்றப்பட்டேன் - கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை
முன்னாள் ஜனாதிபதி (President) கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) நான் ஏமாற்றப்பட்டேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை
தான்அதிகாரத்திற்கு வந்ததும் 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார் எனினும் அது இடம்பெறவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போட்டார் என மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி என்னை ஏமாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பாரதூரதன்மையை அனைத்து கட்சிகளும் தலைமைகளும் உணர்ந்து இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |