இனவாதத்தை கையிலெடுக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்! இளங்குமரன் எம்.பி விசனம்
மக்களால் நிராகரிக்கப்பட்ட பல முன்னாள் அரசியல்வாதிகளுக்கு, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு இனவாதம் ஒரு நல்ல மூலதனம் என்று ஆளும் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எமது அரசாங்கத்திற்குள் இனவாதம் இல்லை எனவும், முன்னாள் அரசியல்வாதிகள் பலர், சிங்களவர்களும் சரி, தமிழர்களும் சரி இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாவகச்சேரி - புலோலி வீதிப் புனரமைப்புக்கான ஆரம்ப நாள் நிகழ்வு யாழ்.சரசாலையில் நேற்று (24) இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சால், இந்த வீதி புனரமைப்பிற்காக 232 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீதி புனரமைப்பு ஆரம்பநாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி இணைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த இளங்குமரன் எம்.பி,










