உலகில் முதன்முதலாக 'ChatGPT Plus'ஐ இலவசமாக பாவிக்க உள்ள நாடு
உலகில் முதன்முறையாக 'ChatGPT Plus' எனப்படும் 'Open AI' நிறுவனத்தின் ப்ரீமியம் பதிப்பு டுபாய் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் 'OpenAI' நிறுவனம் மற்றும் டுபாய் அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.
இதில் அபுதாபியில் 'Stargate UAE' எனப்படும் ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதும் அடங்கும்.
டுபாய் நாட்டை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும்.
செயற்கை நுண்ணறிவு திட்டங்கள்
மேலும், செயற்கை நுண்ணறிவை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுவருவதும் இதன் மற்றுமொரு குறிக்கோளாக கருதப்படுகின்றது.
இது போன்ற செயற்கை நுண்ணறிவு திட்டங்கள், சிறந்த சுகாதாரம், நவீன கல்வி மற்றும் தூய்மையான ஆற்றல் போன்ற நன்மைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் என 'OpenAI' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவை பரவலாக்கும் முயற்சியின் ஒரு ஆரம்பமே டுபாய் எனவும் விரைவில் இது பல நாடுகளிடையே விஸ்தரிக்கப்படும் எனவும் 'OpenAI' நிறுவனம் நம்புகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
