முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது விளையாட்டு தொடர்பான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆட்ட நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகை
இந்த வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் குற்றப்பத்திரிகைகள் முறையாக வழங்கப்பட்டன அத்துடன் சேனநாயக்கவின் கைரேகைகளை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பிணைகளில் அவர் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த குற்றச்சாட்டுகள் 2020 நவம்பர் 21–22 றகு இடையிலான லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுடன் தொடர்புடையவையாகும்.



