ஏப்ரல் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 25 சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிரான வழக்குகளை, மூன்று நீதிபதிகளை கொண்ட ட்ரயல் அட் பார், நீதிமன்றில் விசாரிக்கும் வகையில், சட்டமா அதிபர், பிரதம நீதியரசருக்கு குற்றப்பத்திரிகைகளை அனுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் , சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 23ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்மானிக்கும்படி பிரதம நீதியசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நௌபர் மௌலவி உட்பட்ட 25 பேருக்கும் எதிராக முக்கிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
புனித அந்தோனியார் தேவாலயம் கொச்சிக்கடை, செயின்ட் செபஸ்டியன் தேவாலயம், கிங்ஸ்பரி விருந்தகம், ஷங்க்ரிலா விருந்தகம், கொழும்பு, சினமன் கிராண்ட், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் வானிலை வெப்ப மண்டல விடுதி ஆகிய எட்டு தாக்குதல்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.




