நவ்பர் மெளலவி உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் நவ்பர் மெளலவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 16 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேகாலை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
மாவனெல்லை மற்றும் சில பிரதேசங்களில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தி மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டமை, இனங்களுக்கிடையில் குழப்பகரமான நிலைமையை தோற்றுவித்தல் மற்றும் மதங்களுக்கிடையிலான பிளவுகளை உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மேற்படி 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொகமட் சாஹிட் மொகமட் சாஜித்,சாதிக் அப்துல்லா,சைனுலாப்தீன் ஆகியோர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராகவே மேற்படி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 டிசம்பர் மாதம் மாவனல்லை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளை சேதப்படுத்தி இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கு முயற்சித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தே மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை பாடல் நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு பிரம்மாண்ட பரிசுத் தொகை.... அறிவித்த சரிகமப லில் சாம்ப்ஸ் டீம் Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri