இன்று முதல் அதிகரிக்கும் இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணங்கள்
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 345,000 ரூபாயிலிருந்து 2000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அது ஏழு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணமாகும்.

அத்துடன், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கான கட்டணம் 1150 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாகவும், வதிவிட வருகையாளர் திட்ட வீசா திட்டத்தின் கீழ் விசா வழங்குவது 200 அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேலும் பல பிரிவுகளின் விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri