யாழ். மாநகர சபையில் குழப்ப நிலை
யாழ். மாநகர சபையின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக இன்றையதினம்(27) விசேட அமர்வுக்காக கடந்த 23ஆம் திகதியன்று திகதியிடப்பட்டிருந்தது.
அதனடிடையில், இன்று காலை முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு நடைபெற்றது.
சுகாதார குழு
அதன் பின்னர், மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவி முடிந்தவுடன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சபையின் உறுப்பினர் தர்சானந்த் கடந்த 23ஆம் திகதி கூட்டத்தில் சுகாதார குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று அதன் தொடர்ச்சி நடைபெற்றது.
ஆனால் அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இந்து ஏற்றுக்கொள்ளப்படுள்ளது. இது எவ்விதத்தில் நியாயமானது. தமக்கு தமது கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
வெளி நபரது ஆதிக்கம்
கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

ஆனாலும் முதல்வர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பை காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை என கூறியதுடன் சபையில் வெளி நபரது ஆதிக்கம் வலுவாக இருப்பதாகவும் இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன் மற்றும் கஜிந்தன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri