சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி: இலங்கை அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தயார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பிலும், அதன் பின்னரான சர்ச்கைள் தொடர்பிலும் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்கள்
சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கு ஆதரவானது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை என்றும் சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |