வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் வளர்ச்சியில் அங்கம் வகிக்க தயார்: ஜீவன் தொண்டமான்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் வளர்ச்சியில் அங்கம் வகிக்க ஆர்வமாக உள்ளனர் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்று (27) காலை செனல் நியூஸ் ஆசியாவுக்கு(Channel News Asia) வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த சில நாட்களாக, அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் 16 இருதரப்பு சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், அவர்கள் அனைவரும் இலங்கையை குறிப்பிடத்தக்க அளவு மீண்டெழுந்த பயணம் மற்றும் அவை எவ்வாறு நமது வளர்ச்சி முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,மிகவும் கடினமான நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவந்த கதையையும், இலங்கை நாடு திவால்நிலையில் இருந்து மீண்டுவர எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடின உழைப்புக்கு நன்றி
நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியின் விளைவாகவே இலங்கையின் இருதரப்பு கடனை மறுசீரமைப்பு தொடர்பான விடயம் சாத்தியமானது என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வலுவான மற்றும் அதிக நம்பிக்கையுள்ள தேசமாக உலகிற்கு அடியெடுத்து வைக்க முடியும் என்றும், நம் நாட்டிலும் நம் மக்களிடமும் எங்களிடம் நிறைய ஆற்றல் உள்ள போதிலும் அது பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மக்களை பொருளாதாரம் வலுப்படுத்தினால், அனைத்து இலங்கையர்களுக்கும் உரிய எதிர்காலம் எமக்குக் கிடைக்கும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தன்னை விட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது மிரட்டல் தொனியில் ஜனாதிபதி உரை : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
