தன்னை விட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது மிரட்டல் தொனியில் ஜனாதிபதி உரை : எழுந்துள்ள குற்றச்சாட்டு
தன்னை விட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என மிரட்டல் தொனியில் ஜனாதிபதி நேற்றைய தினம் உரையாற்றியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(27.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஒரு உரையை ஆற்றினார். அதில் 2022ஆம் ஆண்டு கடன் செலுத்த முடியாத வங்குரோத்தாக இருந்த இலங்கை நாடு இப்பொழுது 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் நம்பிக்கை வைக்க கூடிய வகையில் அந்த விடயங்கள் கையாளப்பட்டு வருவதாக கூறுகின்றார்.
அது மாத்திரமன்றி 1977 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்பொழுது தான் முதன் முறையாக அரசாங்கம் உபரி நிதியை உருவாக்கியிருப்பதாகவும், 5500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இப்போது வெளிநாட்டு நாணயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை இதற்கு முன்பாக 16 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கியிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கு ஆனால் 16 முறை கடன் வாங்கியும் தோல்வியில் முடிந்ததாக அவர் நேற்றைய தினம் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
