சனல் 4 ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் விஜயதாச ராஜபக்ச
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விசாரணையானது சர்வதேச விசாரணையாக இருக்கும் என்றும் உள்நாட்டு விசாரணையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை
எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் குறித்து 'செனல் 4' அம்பலப்படுத்தியதில் சந்தேகம் இருப்பதாக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசை, புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவானது
என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள்
குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |