இலங்கையில் போரின் போது அறிமுகமான திட்டம்! நாட்டில் வாகன இலக்கத்தகட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வாகன இலக்கத் தகடுகளில் காணப்பட்ட மாகாணக் குறியீடுகள் தோல்வியடைந்த திட்டம் என்பதால் அது நீக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு கூட்டத்தில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் அவர்கள் கூறுகையில், நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போர்ச் சூழலின் போது வாகனங்கள் எந்த மாகாணத்திலிருந்து வருகின்றன என்பதை பொலிஸார் எளிதில் அடையாளம் காணும் நோக்கில் மாகாணக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
செயலிழந்த திட்டம்
இதற்காக ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்துடன் கூடிய இலக்கத் தகடுகள் பொலிஸாருடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டன. ரேடியோ அலைவரிசை அடையாள தொழிநுட்பத்தை வாசிப்பதற்கான நவீன உபகரணங்கள் பொலிஸாரிடம் இருக்கவில்லை.

இதனால் தொழிநுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்தும் வசதி இல்லாததால் இத்திட்டம் செயலிழந்தது. தற்போது நாட்டில் போர்ச் சூழல் நிலவாத காரணத்தினால், வாகனங்களை மாகாண ரீதியாக அடையாளம் காணும் நடைமுறை இனி அவசியமில்லை என பொலிஸார் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இலக்கத்தகடுகளைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் அதிகளவு பணம் செலவிடுவதும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam