இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் வாகன விற்பனை பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்ய முயற்சிப்பதே இதற்கு காரணமாகும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் நியாமற்ற முறையில் உள்ளமையினால் மக்களின் வாகன ஆசை கனவாகவே உள்ளதென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனம் ஒன்று இலங்கையில் 7,650,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்து.
2019ஆம் தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனம் ஒன்று ஜப்பான் இணையத்தளத்தில் 10,730 அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் இலங்கை பெறுமதி 2,178,190 ரூபாயாகும்.
அந்த மோட்டார் வாகனத்தின் விலையுடன், கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணத்தை சேர்த்தால் அதன் பெறுமதி 2,492,637 ரூபாயாகும்.
அதற்கமைய 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விட்ஸ் மோட்டார் வாகனத்திற்கு 5,157,363 ரூபாய் அதிகமாக அறவிடப்படுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam