மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உரப் பிரச்சினை, வெள்ள அனர்த்தம் காரணமாக கடந்த சில மாதங்களாக நாட்டில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கடுமையாக உயர்ந்திருந்தன.
இந்நிலையில்,நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 1 கிலோ முட்டை கோஸ் 165 ரூபாவாகவும், 1 கிலோ கெரட் 295 ரூபாவாகவும், 1 கிலோ வெண்டைக்காய் 165 ரூபாவாகவும், 1 கிலோ முள்ளங்கி 85 ரூபாவாகவும்,1 கிலோ பீட்ரூட் 195 ரூபாவாகவும், மற்றும் 1 கிலோ உருளைக்கிழங்கு 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 1 கிலோ பீன்ஸ் 270 ரூபாய், 1 கிலோ குடைமிளகாய் 1,300 ரூபாய், 1 கிலோ ப்ரோக்கோலி 2,300 ரூபாய், 1 கிலோ சிவப்பு முள்ளங்கி 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


