இலங்கை சந்தைகளில் மெழுகுவர்த்தி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை சந்தைகளில் மெழுகுவர்த்திகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமையினால் திடீர் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஹட்டன் உள்ளிட்ட முக்கிய பெருந்தோட்ட நகரங்களில் மெழுகுவர்த்திகளின் விலைகள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய மெழுகுவர்த்தி 7.50 ரூபாயாகவும் சராசரி அளவு மெழுகுவர்த்தி 37.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரு பக்கட்டில் 40 மெழுகுவர்த்திகள் இருப்பதாகவும், அது ஒரு மாத காலத்திற்குள் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மெழுகுவர்த்தி உற்பத்திக்கு தேவையான மெழுகு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படாததால் சந்தையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமகாலத்தில் இலங்கையில் மெழுகுவர்த்திகளுக்கான தேவை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவானோர் மெழுகுவர்த்திகளை கொள்வனவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போக்குவரத்து தடை? - அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
