இலங்கை கல்வி முறையில் மாற்றம் - செய்திகளின் தொகுப்பு
தரம் ஆறிற்கு (06) மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் ஏழு பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்ப பூர்வீக கைத்தொழிகளை இணைத்து எஞ்சிய மூன்று பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைகளுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டும் என சுசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |