பெயர் மாற்றப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையம்
கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தின் பெயர் நவோதாவ சிகிச்சை நிலையமாக (Navodawa Treatment Center) மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை பரிந்துரையின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நவோதாவ சிகிச்சை நிலையம்
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் நவோதாவ சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி. டி.யு. கே. செனவியாராச்சி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம். எஸ். சோமரத்னவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்திலிருந்து போதைக்கு அடிமையானவர்கள் தப்பிச் செல்லும் பல சம்பவங்கள் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
