ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில் விரைவில் இரு அமைச்சு பதவிகளில் மாற்றம்...!
எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பல தடவைகள் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரிய போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
