இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
உர வகைகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உர வகைகளில் விலையை குறைக்க உர இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல உர வகைகளின் விலையினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் குறைவடைந்த உரத்தின் விலை

இதற்கமைய 50 கிலோகிராம் எடையுடைய யூரியா ஒரு மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேயிலை பயிர்ச்செய்கைக்கான பல்வேறு உரவகைகளின் விலையானது ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் நந்தன சமரகோன் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உரத்திற்கான விலை குறைவடைந்தமையினாலேயே உரத்தின் விலை குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam