பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றம்! - அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலாகும் என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் பொருந்தும் என்றும், சர்வதேச பயணங்களுக்கான சுய தனிமை விதிகள் குறித்து அரசாங்கம் இந்த வாரம் கூடுதல் விவரங்களை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளை ஜூலை 19ம் திகதியுடன் முழுமையாக தளர்த்துவதற்கு எண்ணியுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்தார்.
இதில் முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை பேணுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அடங்கும்.
பிரித்தானியாவில் இன்றைய தினம் கோவிட் தொற்றினால் மேலும் 28,773 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிக்கையொன்றில் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இவ்வாறு கூறியுள்ளார்,
ஆகஸ்ட் 16ம் திகதி முதல் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
ஆகஸ்ட் 16ம் திகதிக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ யாராவது தங்கள் இரண்டாவது அளவு தடுப்பூசியை பெற்றால், அவர்கள் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும், அதன் பிறகு அவர்களின் இரண்டாவது தடுப்பூசி நடைமுறைக்கு வந்து இந்த புதிய சுதந்திரங்களை அவர்களுக்கு வழங்க முடியும்.
18 வயதிற்குட்பட்டவர்கள் வழக்கமாக கஷ்டப்படுவதில்லை என்பதால், சுய தனிமைப்படுத்தும் விதிகளிலிருந்து இதேபோன்ற விலக்கு அவர்களுக்கு நீட்டிக்கப்படும் என்றார்.
ஒரு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெரியவர்கள், தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரைவில் பி.சி.ஆர் பரிசோதனையைப் பெற அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், குழந்தைகளுக்கு இது அவர்களின் வயதைப் பொறுத்தது என்றும்” சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.