இலங்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியால், மக்கள் சமைத்த உணவுகளை வீணாக்குவது வெகுவாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் மேல் மாகாணத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளின் அளவு சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல்மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துயரத்தில் தள்ளப்படும் இலங்கை மக்கள்
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
விலை அதிகரிப்பின் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் முதற்கொண்டு, வசதி படைத்தவர்கள் வரை கடும் இக்கட்டான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், ஒரு நேர உணவைப் பெற்றுக் கொள்வதற்கு கூட தினம் தினம் அல்லல்பட வேண்டிய நெருக்கடி சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்லவே அல்லாடி வரும் நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை அதிகரிப்பால் மேலும் துயர நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.