இலங்கையில் பாடசாலை நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடைமுறையில் மாற்றம்
மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.