சதொச நிவாரண பொதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சதொச விற்பனை நிலையம் ஊடாக அரிசி ,சீனி உள்ளிட்ட 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
நாளையிலிருந்து (27) சீனியை பெற்றுக்கொள்ள முடியாத நுகர்வோர் 1998 ரூபா பெறுமதியான அந்த பொதியில் சீனிக்கு பதிலாக 2 கிலோ கிராம் சம்பா அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக இதுவரை பெற்றுக்கொடுக்கப்பட்ட 5 கிலோ கிராம் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கிராம் அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் மாத்திரமே அமுலில் இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
