எதிர்பாராத தருணத்தில் பதவி மாற்றம்! பிரியாவிடை நிகழ்வில் பவித்ரா உருக்கம்
இலங்கையில் புதிய போக்குவரத்து அமைச்சராக, இன்று காலை நியமிக்கப்பட்ட, முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தாம் எதிர்பாராத தருணத்தில், சுகாதார அமைச்சில் இருந்து நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற பிரியாவிடை விழாவில் பேசிய அவர், எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று தனது மனதை தேற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத தருணத்தில் போக்குவரத்து அமைச்சகம், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாம், ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வரை தமக்கு இது தெரிந்திருக்கவில்லை. எப்படியிருந்தாலும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பவித்ராவின் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
