அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாற்றம்
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம வைத்தியசாலையில் இந்த திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை போசாக்கு நிபுணர்கள் நிறுவனம்தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உணவின் தரம்
மேலும், அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வீண்விரயத்தைக் குறைத்தல் என்பனவற்றின் அடிப்படையில் உணவுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டம் மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |