இலங்கையில் முதன்முறையாக இயற்கையில் ஏற்பட்ட மாற்றம்
எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு பின்னர் மரக்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், நிபுணத்துவ விவசாய பொருளாதார ஆய்வாளருமான துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவில் நாசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை
இம்முறை மலையகம், தாழ்நிலம் என இரு பகுதிகளிலும் சமமாக மழை பெய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இது போன்ற மழை இதற்கு பெய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழு நாட்டினதும் விவசாய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாலேயே மரக்கறிகளின் விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரக்கறிகளின் விலை உயரும் போது பருப்பு, தானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஆனால் அரசாங்கம் பலவிதமான வரிகளை விதித்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |